
பிரச்னைகளில் இருந்து மீண்டு விட்டேன் : சசிகுமார் நெகிழ்ச்சி
படம் குறித்து சசிகுமார் அளித்த பேட்டி: இந்த படத்தில் நான் சினிமா சவுண்ட் என்ஜீனியராக நடித்திருக்கிறேன். எனது மனைவியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். அமைதியான எங்கள் வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்து விட, காமென் மேனாக இருந்த நான் எப்படி மிருக குணம் கொண்டவனாக மாறுகிறேன் என்பதுதான் படத்தின் கதை.
நான் இப்போது மதுரையில் வாழ்கிறேன். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருகிறேன். எனது படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மதுரை, தேனி பகுதியில் நடப்பதால் அங்கு இருப்பதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது. எனது குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகளால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதனால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
கையில் இருக்கும் படங்களை வேகமாக முடித்து கொடுத்து விட்டு அடுத்த படம் இயக்கலாம் என்று இருக்கிறேன். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சரித்திர படத்தை இயக்குகிறேன். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. சு.வெங்கடேசன் எழுதிய ஒரு சரித்திர புனைவு கதையை படமாக்கும் திட்டம் இருக்கிறது. அது பெரிய பட்ஜெட் படம் என்பதால் இப்போதைக்கு அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. இனி நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என எனது பயணம் விறுவிறுப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!