
தசராவுக்கு காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்
தெலுங்கில் தயாராகும் இந்த படம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. படத்தின் நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் தோற்றமும் கேரக்டரின் "வென்னலா" என்ற பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. தசாரா திருவிழாவில் கீர்த்தி சுரேஷ் உற்சாக நடனமாடுவது போன்று இந்த கேரக்டர் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படம் தவிர போலோ சங்கர் என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மகாநடி படத்திற்கு தேசிய விருது வாங்கியதற்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. மகேஷ் பாபுவுடன் நடித்த "சர்காரு வாரிபட்டாக" படம் மட்டுமே அவருக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை கீர்த்தி ஆவலாக எதிர்பார்க்கிறார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி "சைரன்" படத்தில் நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!