
விஷ்ணு விஷால் வெளியிட்ட யானை வீடியோ
கடந்த மாதம் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு, இந்த படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். அதேசமயம் முன்பு யானைகளைக் கண்டு பயந்தேன். ஆனால் யானைகள் குழந்தை மாதிரி என்பது அவற்றுடன் பழகிய பிறகு தான் தெரிந்து கொண்டேன். அந்தவகையில் எனக்கு இப்போது யானைகள் மீது பயமில்லை. மனிதர்கள் மீதுதான் பயம் என்று சொன்னார் விஷ்ணு.
இந்த நிலையில் தற்போது ஒரு யானையின் மீது தான் கூலாக ஏறி அமர்ந்து விட்டு, இறங்கும் ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு. படப்பிடிப்பு தளத்தில் யானையுடன் பழகிய விதம் குறித்தும் அதில் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!