
தீபாவளிக்குப் பிறகு அஜித்தின் டேர் டெவில் படப்பிடிப்பு
அவரது அடுத்த படம் எப்போது என அவரது ரசிகர்கள் கேட்டதற்கும் உடனடியாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒரு வழியாக ஆகஸ்ட் 3ம் தேதி அவரது அடுத்த படமாக "டேர் டெவில்" படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். அப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிப்பதாகவும் அறிவிப்பில் இடம் பெற்றிருந்தது.
அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களாகியும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கத் திட்டமிட்டு வேலையை ஆரம்பித்தார்களாம். அதற்காக ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டில் பிரம்மாண்ட அரங்குகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 8ல் தீபாவளி பண்டிகை வருவதால் அதை முடித்துக் கொண்டு முதல் கட்டப் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஒரு மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். கதாநாயகி இதர நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!