
பிளாஷ்பேக்: நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இயக்கிய படம்
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களோடு பயணித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தூய தமிழ் உச்சரிப்பால் லட்சிய நடிகர் என்ற பெயரை பெற்றார். சிவாஜியுடன் "பராசக்தி"யில் அறிமுகமானாலும், எம்ஜிஆருக்கு நெருக்கமானவராக இருந்தார். பல படங்களில் பல கேரக்டர்களில் நடித்தாலும் புராண படங்கள், பக்தி படங்களில் நடித்ததில்லை.
நடிகராக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது கேரியரில் 3 படங்களை இயக்கி உள்ளார். 1960ம் ஆண்டு "தங்கரத்தினம்" என்ற படத்தையும், 1964ம் ஆண்டு "அல்லி" என்ற படத்தையும், 1966ம் ஆண்டு "மணிமகுடம்" என்ற படத்தையும் இயக்கினார்.
தான் இயக்கிய படங்களை தானே தயாரித்தார். ஆனால் எந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறாததால் ஒரு கட்டத்தில் படம் இயக்குவதை கைவிட்டார். அவர் இயக்கிய படங்களில் அவரே நாயகனாக நடித்தார். அவரது மனைவி விஜயகுமாரி நாயகியாக நடித்தார். எல்லா படங்களும் முற்போக்கு சிந்தனைகள் மற்றும் பகுத்தறிவு கருத்துகளை பேசும் படங்களாக இருந்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!