
ஹாலிவுட் நடிகர் பாட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்
85 வயதைக் கடந்த பேட்ரிக் காலமானர். முதுமை காரணமாக அல்சைமர், லூயி பாடி டிமென்ஷியா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் காலமாகிவிட்டதாக குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1987ம் ஆண்டு வெளியான "ஸ்டார் டிரக்" தொலைக்காட்சித் தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்டாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பல ஆண்டுகள் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிவியல் புனைவுக்கதை உலகில் தனக்கென இடத்தைப் பிடித்தார். 2000ம் ஆண்டு வெளியான "எக்ஸ் மேன்" படத்தில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அவரது திரைப்பயணத்தின் அடையாளங்களாக மாறின. விரைவில் திரைக்கு வரவிருக்கும் மார்வெலின் "அவென்ஞ்சர்ஸ்: டூமஸ்டே" படத்தில் பேராசிரியர் சேவியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 60 ஆண்டுகால கலைப் பயணத்தில் மூன்று ஒலிவியர் விருதுகள் உள்ளிட்ட பல அங்கீகாரங்களைப் பெற்றார். கலைத்துறைக்கான பங்களிப்பைப் பாராட்டி 2010ம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவருக்கு "நைட்" பட்டம் வழங்கினார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…