
ராமாயணத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் : ஏ.ஆர் ரஹ்மான்
இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் தமிழ் பதிப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடந்தது இதில் கலந்துகொண்டு ஏ ஆர் ரஹ்மான் பேசியதாவது :
என்னுடைய பள்ளி காலத்தில் இருந்து பார்த்த ராமாயண கதைகளை நினைத்து பார்க்கிறேன். அதன்பிறகு ஆர்.எஸ்.மனோகரனின் ராமாயணம், அடுத்து, லங்கேஸ்வரன், இப்போது நிதேஷ் திவாரியின் இந்த "ராமாயணம்". இதை ஒரு கற்றல் பயணமாகத்தான் நான் கருதுகிறேன். ஒரு சிறந்த கதாபாத்திரம் தனது தாயிடம், தந்தையிடம், மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நமக்கு தொடர்ந்து கற்றுத் தருகிறது இல்லையா? நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கிறது.
இந்திய இசையை வட இந்தியா, தென்னிந்தியா என எந்த இசையாக இருந்தாலும் அது கிருஷ்ணர், ராமர் என பக்தியாக நிறைந்துள்ளது. அதை நாம் கீர்த்தனை, தும்ரி, பந்திஷ், வர்ணம் மூலமாக கற்றுக் கொள்கிறோம். இசையின் அடிப்படையே பக்திதான்.
அப்படியானால் இங்கே ஒரு இசையமைப்பாளருக்கு, ராமாயணத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டும் என சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்திற்கு இசையமைக்க மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டேன். இந்த கால அவகாசம் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!