
ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம் இனிதே நடந்தது : திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து
கடந்த ஆயுத பூஜை தினத்தில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார். சென்னையில் பிறந்த நர்மதா தற்போது ஸ்டார்ட்-அப் தொழில் செய்து வருகிறார். பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த இவர்களது திருமணம் இன்று(அக்., 28) சென்னையில் ஜிபிஎன் பேலஸில் இந்து முறைப்படி இனிதே நடந்தது.
திருமணத்தின்போது மணமகன் ஹரிஷ் கல்யாண் பட்டு வேஷ்டி சட்டையும், மணமகள் நர்மதா சிவப்பு நிற பட்டுப்புடவையும் அணிந்து இருந்தனர். புதுவாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!