
துணிவு ரிலீஸ் - வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்குமா ?
பொங்கலுக்கு விஜய் நடிக்கும் "வாரிசு" படமும் வெளியாக உள்ளது. அப்படத்தை விஜய்யின் "மாஸ்டர்" படத்தைத் தயாரித்த, விஜய்யின் 67வது படத்தைத் தயாரிக்க உள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒரு படத்தை வெளியிடுகிறதென்றால் அதற்குப் போட்டியாக வேறொரு நடிகரின் படத்தை வெளியிடுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள் கிடைப்பது அரிதானது.
பொதுவாக தமிழக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் அஜித்தின் படங்களை விட விஜய்யின் படங்களுக்குத்தான் எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகம் இருக்கும். இந்நிலையில் "துணிவு" படத்திற்குப் போட்டியாக "வாரிசு" படத்திற்கு அதிக தியேட்டர்களை எப்படி படத்தை வினியோகிப்பவர் வாங்கப் போகிறார் என்பதை திரையுலகில் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
இந்த விவகாரம் விரைவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!