ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஹனுமான்
பிப் 06, 2024
Advertisement
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தெலுங்குப் படம் "ஹனுமான்". பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
25 நாட்களில் இப்படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கில் பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களைக் காட்டிலும் வளரும் இளம் நடிகரான தேஜா நடித்த இந்த "ஹனுமான்" படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளது இந்தியத் திரையுலகிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்ததைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் அமெரிக்கா சென்று கடந்த மூன்று நாட்களாக ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…