கமல் படத்திற்கு அடுத்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்!
Advertisement
Advertisement
கமல் படத்திற்கு அடுத்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்!
அக் 22, 2023
அ நிறம் | அளவு
Advertisement
சதுரங்க வேட்டை படத்தில் இயக்குனரானவர் எச்.வினோத். அதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு போன்ற படங்களை அடுத்து தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 233வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில், கமல் படத்தை முடித்ததும் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு எச்.வினோத் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதற்கு முன்பு தான் நடித்த கைதி, சர்தார் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று படமும் இடம்பிடித்துள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!