
செப்., 13ல் வெளியாகிறது கோலி சோடா 3
செப் 04, 2024
Advertisement
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கோலி சோடா 1, 2 . இரண்டு பாகங்களும் வரவேற்பைப் பெற்றது. தற்போது கோலி சோடா மூன்றாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். இதில் சேரன், ஷாம், அபிராமி, புகழ், அவந்திகா, அம்மு அபிராமி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோலி சோடா மூன்றாம் பாகத்திற்கு "கோலி சோடா ரைசிங்" என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிறது. வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவித்தனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!