மீண்டும் வருகிறார் கீதாஞ்சலி கிரிஜா
பிப் 20, 2023
Advertisement
1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் தெலுங்கு படம் கீதாஞ்சலி. இந்த படம் இதயத்தை திருடாதே என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் லண்டனை சேர்ந்த கிரிஜா நாயகியாக நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றதோடு விருதுகளையும் குவித்தது.
படத்தின் நாயகி கிரிஜா அதன்பிறகு மோகன்லாலுடன் "வந்தனம்" என்ற மலையாளப் படத்திலும், பாலிவுட்டில் துஜே மேரி கசம் படத்திலும் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு கிடைக்காதலால் லண்டனுக்கே திரும்பி விட்டார்.
லண்டனில் பிறந்து வளர்ந்தாலும் கிரிஜாவின் பூர்வீகம் கர்நாடக மாநிலம். 53 வயதான கிரிஜா தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். காந்தாரா பட இயக்குனர் தயாரிக்கும் "இப்பனி தப்பித இலேயல்லி" என்ற படத்தில் நடிக்கிறார். இதனை அவரது உதவியாளர் சந்திரஜித் இயக்குகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!