ஆகஸ்ட் மாதத்தை குறிவைக்கும் கவின்
ஜூன் 07, 2024
Advertisement
இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வந்தார். இதற்கு "பிளடி பெக்கர்" என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்
கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற வாரங்களில் வெளியாகும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…