
உயரமான காதலனால் சங்கடங்களை சந்திக்கும் கவுரி கிஷன்
இன்னொரு பக்கம் மலையாளத்திலும் கவனம் செலுத்தி நடித்து வரும் கவுரி கிஷன் தற்போது ‛லிட்டில் மிஸ் ராவுத்தர்" என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை விஷ்ணு தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை எழுதி உள்ள செர்ஷா ஷெரீப் என்பவர் இந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
6.2 அடி உயரமுள்ள சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரியும் கதாநாயகனுக்கும் வசதியான குடும்பத்தை சேர்ந்த 5 அடி உயரம் உள்ள கதாநாயகிக்கும் இடையே ஏற்படும் காதலும் அது சார்ந்த பிரச்னையும் தான் இந்த படத்தின் கதை. கடந்த அக்டோபர் 6ம் தேதியே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போய் வரும் அக்டோபர் 12ம் தேதி ரிலீசாக இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!