கருடன் - மூன்றே நாளில் 17 கோடி வசூல்?
ஜூன் 03, 2024
Advertisement
ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "கருடன்".
"விடுதலை" படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக சூரி நடித்த படம் இது. இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியான போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படமும் இருந்ததால் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.
படத்தைத் தியேட்டர்களுக்கு வந்த பார்த்து ரசிகர்களும் நிறைவாகச் சொன்னதால் படம் வெளியான தினத்தில் மாலைக் காட்சியிலிருந்தே படத்திற்கு கூட்டம் அதிகமாகியது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படம் சுமார் 17 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கதையின் நாயகனாக இரண்டாவது படத்திலும் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறார் சூரி.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!