
“முரட்டுத்தனமானவர்” : 13 வருடத்திற்கு முன்பு மம்முட்டியுடன் நடித்தபோது தனுஷின் எண்ணம் இதுதான்
அப்போது மம்முட்டியுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தனுஷ் பேசும்போது, "வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து பணியாற்றினேன். அந்த சிறிய சந்திப்பின்போது மம்முட்டியின் நடவடிக்கைகளை பார்த்ததும் அவர் சற்று முரட்டுத்தனமான குணம் கொண்டவராக இருக்கலாமோ என்று நினைத்தேன். தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓம் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய போது தான் அவரைப் பற்றிய கருத்து முற்றிலுமாக மாறிவிட்டது. அவருடைய நக்கல் கலந்த பதில்களும் தனித்துவமான உரையாடல் பாணியையும் குறிப்பிட்டு சொன்னால் மம்முட்டி சார் என்றால் தக் லைப் என்று சொல்ல வேண்டும்" என அவரைப் பற்றி கலகலப்பாக புகழ்ந்து பேசி உள்ளார் தனுஷ்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…