
பிளாஷ்பேக் : ஒரு நடிகையால் நடிப்பதையே நிறுத்திய சிவகுமார்
அது ஏன்? என்ற கேள்விக்கு அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு டிவி சீரியல்களில் அதிகம் நடித்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் சம்பாதித்ததை விட சீரியலில் அதிகம் சம்பாதித்தேன். "பாசமலர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி கணேசன் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 2 நாட்கள் தூங்காமல் சாப்பிடமால் இருந்து நடித்தார். அதுபோல நானும் நான் நடித்த சீரியலின் ஒரு காட்சிக்காக கஷ்டப்பட்டு நடித்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு நடிகை காதலனுடன் போனில் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். நான் கோபத்துடன் உயிரைக் கொடுத்து நடிக்கிறேன் இப்படி மதிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் "இப்ப எதுக்கு சார் கத்துறீங்க? எப்படியும் இத டப்பிங் தான பேச போறீங்க" என அலட்சியமாக பேசினார். அன்று நான் இந்த நடிப்புக்கு மரியாதை இல்லை. இனி இந்த நடிப்பே வேண்டாம் என என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டு முடிவெடுத்தேன்" என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!