
ஷகிலா சொன்னது உண்மையா? - ரூபா ஸ்ரீ விளக்கம்
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ரூபா ஸ்ரீ, "அன்று ஷகிலா தான் என்னை காப்பாற்றி அனுப்பி வைத்தார். ஆனால், அவர் சொன்னது அத்தனையும் உண்மையல்ல. நான் மலையாளத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தேன். அப்போது வேறு ஒரு படத்திலும் நடித்து வந்தேன். படக்குழுவினரிடமும் இதை ஏற்கனவே சொல்லி அந்த படத்தின் ஷூட்டிங் போகவும், அதற்கு டாக்ஸி புக் செய்யவும் கேட்டிருந்தேன். முதலில் ஓகே என்று சொல்லியவர்கள், கடைசியில் என்னை அனுப்பாமல் பிரச்னை செய்தனர். அவர்கள் குடித்தும் இருந்தனர். அப்போது ஷகிலா தான் என்னை காப்பாற்றி அங்கிருந்து டாக்ஸி புக் செய்து அனுப்பி வைத்தார். அதன்பிறகு அந்த படத்தின் ஷூட்டிங் முடித்து இரண்டு நாட்கள் கழித்து நான் மீண்டும் அதே படத்திற்கு ஷூட்டிங் வந்துவிட்டேன். மற்றபடி அது அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை இல்லை" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!