
பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த்
மார் 05, 2026
Advertisement
இப்போதெல்லாம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் சண்டை காட்சிகள் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடிகர் விஷால், இயக்குனர் ஹரி போன்றவர்கள் இதனை அடிக்கடி செய்கிறார்கள். அதையே தங்கள் படத்தின் விளம்பரத்திற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதன் முதலாக நடித்தவர் விஜயகாந்த். படம் "நல்லவன்".
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ரஜினியை வைத்து 20க்கும் மேற்பட்ட படங்களையும், கமலை வைத்து பத்திற்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கி இருந்தார். அவர் விஜயகாந்தை இயக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் விருப்பம். நீண்ட போராட்டத்திற்கு பிறகு "நல்லவன்" படத்தில் இருவரையும் இணைத்தார்.
இந்த படத்தின் மூலம் விஜகாந்திற்கு பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்கள் இந்த படத்தில் சேர்க்கப்பட்டது. குறிப்பாக விஜயகாந்த் இதில் இரட்டை வேடங்களில் நடித்தார். காஷ்மீர் பனி மலையில் பாடல் காட்சியும், சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. கிளைமாக்ஸ் சண்டை காட்சி லடாக்கில் 100 லாரிகளை கொண்டு படமாக்கப்பட்டது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த மாதிரி இந்த படத்தில் சிங்கிள் ஷாட் சண்டை காட்சி படமானது. ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகமம் மிட்செல் கேமராவை பயன்படுத்தி சண்டை காட்சியை படமாக்கினார். ஆனால் இதனை விளம்பரத்திற்காக பயன்படுத்தவில்லை.
இந்த படத்தில் ராதிகா, நம்பியார், எஸ்.எஸ்.சந்திரன், ஜனகராஜ், வாணி விஸ்வநாத், மணிமாலா, தியாகு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!