
அக்டோபர் 30ல் 6 படங்கள் ரிலீஸ்
அக்டோபர் 15ம் தேதி வெளியான "ஜெயிலர் 2" படம் இரண்டாவது வாரத்திலும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் கடந்த வாரம் அக்டோபர் 23ம் தேதி ஒரே ஒரு படமாக "ஹைக்கூ" படம் மட்டுமே வெளியானது. அன்றைய தேதியில் அறிவிக்கப்பட்ட மேலும் இரண்டு படங்கள் வெளியீட்டைத் தள்ளி வைத்தன.
நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் அதை முன்னிட்டு சில முக்கியமான படங்கள் வெளியாக உள்ளதால், இந்த வார இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு, “காதல் போதை, பனி விழும் இரவு, நள்ளிரவு ராஜா அழைப்பு, ராஜா வருகிறேன் உனக்காக, சிங்காரம், எனிமி ஆப் தி ஸ்மக்லர்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள "சிங்காரம்" படம் தான் அனைத்து ரசிகர்களுக்கும் தெரிந்த ஒரு நடிகர் நடித்துள்ள படமாக உள்ளது. இந்த வார வெளியீட்டுடன் இந்த வருடத்திய வெளியீடுகளின் எண்ணிக்கை 180ஐக் கடந்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!