
பிளாஷ்பேக்: ஒரே பஞ்ச் டயலாக்கில் வெளிவந்த இரண்டு படங்கள்
பிப் 12, 2026
Advertisement
பழைய படத்தின் டைட்டில்களை மீண்டும் பயன்படுத்துவது சில காலமாக நடப்பதுபோல், சில பஞ்ச் வசனங்களை படத்தின் டைட்டிலாக வைப்பதும் அவ்வபோது நடக்கும். அந்த வகையில், 1988ம் ஆண்டு வெளியான "என் வழி தனி வழி" படத்தை வி.அழகப்பன் இயக்கி தயாரித்தார், ரகுவரன், கீதா, சாந்திப்பிரியா, எஸ்.எஸ்.சந்திரன், செந்தில் நடித்தனர். சந்திரபோஸ் இசை அமைத்தார். படம் தோல்வி அடைந்தது.
ஆனாலும், இந்த டைட்டிலில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, 1999ல் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்தை வைத்து இயக்கிய "படையப்பா" படத்தில் பஞ்ச் டயலாக் வைத்திருப்பர். ரஜினிகாந்த் எதிரிகளை பார்த்து, "என் வழி தனி வழி" என பேசிய பஞ்ச் டயலாக், பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. படமும் மிகப்பெரிய ஹிட்டானது.
பின்னர் 2015ல் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே, பூனம் கவுர், மீனாட்சி தீட்சித், ரோஜா, ரகுமான், ராதாரவி ஆகியோர் நடிப்பில் அதே "என் வழி தனி வழி" என்ற டைட்டிலில் படம் வெளியானது. "அப் தக் சாப்" என்ற இந்தி படத்தின் ரீமேக்கான இப்படமும் தோல்வியடைந்தது.
ஒரே வாக்கியம் இரண்டு முறை படமாக வந்து தோல்வியடைந்துள்ளது, அதனை "பஞ்ச்" டயலாக்காக வைத்த படம் ஹிட்டானது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!