பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார்
மார் 03, 2026
Advertisement
13 வயதான அந்த சிறுமியின் தந்தை பைரவப்பா ஒரு போலீஸ் அதிகாரி, தாய் ருத்ரம்மா குடும்ப தலைவி. மிகவும் கட்டுப்பாடான குடும்பம். அந்த சிறுமி பெங்களூரின் செயின்ட் தெரசா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார். எல்லாரும் கன்னடக் கீர்த்தனைகள், கன்னட சினிமா பாடல்கள் என்று பாட, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அந்த சிறுமி "ஏ ஜிந்தகி ஹே மேளே" என்ற ஹிந்திப் படப் பாடலைப் பாடி அவையோரை அதிர வைத்தார்.
அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான ஹொன்னப்ப பாகவதர் சிறுமியின் பாடலை கேட்டு ஆனந்தம் அடைந்தார். நிகழ்ச்சி முடிந்ததும். சிறுமியை “அப்பா அல்லது அம்மா யாரையாவது அழைத்துக் கொண்டு, என் ஸ்டூடியோவுக்கு வா. உன்னைப் பாடகி ஆக்குகிறேன்” என்றார்.
அம்மாவுடன் கிளம்பிப் போனார் சிறுமி. வசதியான குடும்பத்துப் பெண் என்பதால் ஜொலிக்கும் உடையில் வந்திருந்த சிறுமியை பார்த்த பாகவதர் ஆச்சர்யடைந்தார். பள்ளிச் சீருடையில் வந்து பாடிய அந்தச் சின்னப் பெண்ணா இப்படி ஜொலிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார்.
“நீ பாடுவது இருக்கட்டும், கதாநாயகியாக நடிக்கவே செய்யலாமே. நீங்கள் சரியென்றால் உங்கள் மகளை எனது படத்திலேயே கதாநாயகி ஆக்குகிறேன்” என்றார். ஆனால் சரோஜாதேவியின் அப்பா மறுத்துவிட்டார். அவரது அலுவலகத்துக்கே சென்று அவரைச் சந்தித்து, இது காளிதாஸின் வாழ்க்கை வரலாறு; கவுரவமான வேடம் என்று எடுத்துக்கூறிச் சம்மதிக்க வைத்தார். இந்த ஒரு படத்தில் மட்டுமே என் மகள் நடிப்பாள் என்று கண்டிப்பாகக் கூறினார் பைரவப்பா.
ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த "மகாகவி காளிதாஸா" என்ற கன்னடப் படத்தில் 1955ம் ஆண்டு அறிமுகமானார் அந்த சிறுமி. படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.
ஒரே படத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்த சிறுமியின் தந்தைக்கு மகளை நடியாக்க சம்மதித்தார். தொடர்ந்து ஹொன்னப்ப பாகவதரின் "ஆஷாடபூதிக், "பஞ்ச ரத்தினம்" என நடித்த சிறுமி இளம் குமரியாக தமிழுக்கு வந்தார்.
அந்த சிறுமி தான் நடிகை சரோஜாதேவி. பின்னாளில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தார். ‛கன்னடத்து பைங்கிளி" என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!