பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர்
பிப் 25, 2026
Advertisement
அவ்வையார் தமிழ் வளர்த்த மூதாட்டி, தன் புலமையால் பல போர்களை நிறுத்தியவர், பக்தி இலக்கியத்தையும், தத்துவ இலக்கியத்தையும் படைத்தவர். அவரது வரலாறு சினிமா வருவதற்கு முன்பே நாடகமாக நடத்தப்பட்டது. பின்னாளில் சினிமாவில் "அவ்வையார்" தயாரானபோது அதில் நடித்து புகழ்பெற்றார் கே.பி.சுந்தராம்பாள். இப்போதும் அவ்வையார் என்றால் அவர்தான் நினைவுக்கு வருவார்.
ஆனால் அதற்கு முன்பே அவ்வையார் வரலாறு நாடகமாக நடத்தப்பட்ட காலத்தில் அதில் அவ்வையாராக நடித்து புகழ்பெற்றவர். டி.கே.சண்முகம், இதனாலேயே அவரது பெயரும் "அவ்வை சண்முகம்" ஆனது.
சண்முகம் தன் 6 வயதில் முதன் முதலாக "சத்தியவான் சாவித்ரி" நாடகத்தில் நாரதராக நடித்தார். தொடர்ந்து "சீமந்தினி", "சதி அனுசுயா", "சதி சுலோசனா", "பார்வதி கல்யாணம்" என அனைத்து நாடகங்களிலும் நாரதராக நடித்தார். "அபிமன்யு சுந்தரி" நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து பல நாடகங்களில் கதாநாயகனாக நடித்தார். மேனகா என்னும் திரைப்படத்தின் வழியாகத் திரையுலகில் நுழைந்து கப்பலோட்டிய தமிழன் வரை பல்வேறு படங்களில் நடித்தார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!