பிளாஷ்பேக் : விலங்குகளை நம்பிய தேவர்
ஏப் 02, 2026
Advertisement
அடிப்படையில் குஸ்தி பயில்வானாக இருந்த சாண்டா சின்னப்பா தேவர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் எம்ஜிஆரின் நண்பர் ஆனார். பின்னர் தயாரிப்பாளராகி எம்ஜிஆரை வைத்து "தாய்க்கு பின் தாரம்" படத்தை தயாரித்தார். இந்த படம் பெரிய வெற்றி அடைந்து பெரிய லாபம் சம்பாதித்தார். அடுத்த படத்தையும் எம்ஜிஆரை வைத்து தயாரிக்க நினைத்தார். ஆனால் எம்ஜிஆர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் "பின்னர் பார்க்கலாம்" என்று கூறிவிட்டார்.
இதனால் வருத்தம் அடைந்த சின்னப்பா தேவர், அப்போது எம்ஜிஆருக்கு போட்டியாக கருதப்பட்ட ரஞ்சனை வைத்து "நீலமலை திருடன்" படத்தை தயாரித்தார். அவரது 3வது படம் "செங்கோட்டை சிங்கம்". இது கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் வெளிவந்த "டார்ஜான்" வகை கதை. ஏற்கெனவே ரஞ்சனை வைத்து படம் எடுத்ததால் கோபமாக இருந்த எம்ஜிஆர் "என்னால் காட்டுவாசியாக நடிக்க முடியாது" என்ற மறுத்து விட்டார்.
வேறு சில காரணங்களால் ரஞ்சனும் நடிக்க மறுத்து விட கோபம் அடைந்த சின்னப்பா தேவர் "நான் மனிதர்களை விட விலங்குகளை நம்புகிறேன். ஹீரோக்களை விட எனக்கு விலங்குகளே போதும்" என்று கூறி படத்தில் யானை, குதிரை, சிங்கம், புலி இவைகளை மையமாக வைத்துக் கொண்டு அப்போது கன்னடத்தில் முன்னணி நடிகராக இருந்த உதயகுமாரை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். விஎன் ரெட்டி இயக்கினார்.
இதில் உதயகுமாருடன் சரோஜாதேவி, பண்டரிபாய், டி.எஸ்.பாலையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், மைனாவதி, பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், சின்னப்பா தேவர், "குலதெய்வம்" ராஜகோபால், தனம், சி.பி. கிட்டான், வீரமோகன், "பேபி" நித்யானந்தன் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!