பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 8 ஹிட் படங்கள் கொடுத்த சிவாஜி
பிப் 27, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் சிவாஜி சாதிக்காத விஷயங்களே இல்லை. சில வெளிப்படையாக தெரியும், சில சாதனைகள் மறைந்திருக்கும். அதற்கு ஒரு உதாரணம் 1958ம் ஆண்டு சிவாஜி 8 படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இனி அதற்கான சாத்தியமும் இல்லை.
1958ம் வருடத்தின் முதல் படம் "உத்தமபுத்திரன்". இது நூறு நாள் ஓடியது. சில தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. அடுத்து வெளியான "பதிபக்தி" 100 நாட்கள் ஓடிய படம். மூன்றாவதாக வெளியான "சம்பூர்ண ராமாயணம்" ஐந்து நகரங்களில் 100 நாட்களும் மதுரையில் 165 நாட்களும் ஓடியது.
நான்காவதாக வெளிவந்த படம் "பொம்மை கல்யாணம்" 50 நாட்களைக் கடந்து ஓடியது. ஒரு சில தியேட்டர்களில் 100 நாளை கடந்தது. ஐந்தாவது படம் "அன்னையின் ஆணை". இதுவும் 100 நாள் படம். ஆறாவதாக வெளியான "சாரங்கதரா", ஏழாவதாக வெளியான "சபாஷ் மீனா", எட்டாவதாக வெளியான "காத்தவராயன்" ஆகிய படங்களும் 100 நாள் ஓடி வெற்றி பெற்றன.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…