
பிளாஷ்பேக்: நல்ல வாய்ப்புகளை தவறவிட்டு காணாமல் போன நடிகர்
சில நடிகர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும் ஏதோ ஒரு காரணத்தால் அதனை அவர்கள் தவறவிட்டு விடுவார்கள். பிற்காலத்தில் அதற்காக வருந்துவார்கள். இதற்கு ஆகச்சிறந்த உதாரணம் விக்னேஷ். பாலா இயக்கிய "சேது" படத்தில் நடிக்க இவர்தான் தேர்வாகி இருந்தார். பாலா புதுமுக இயக்குனர் என்பதால் அப்போது நடிக்க மறுத்து விட்டார். இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்னொருவர் கரிகாலன். கருப்பு நிறம், தீர்க்கமான கண்கள் என அச்சு அசல் தமிழ் முகமாக இருந்தவர்.
திரைப்படக்கல்லூரியில் படித்த இவர் அதன் பிறகு நடிப்பு வாய்ப்பு தேடினார். முதன் முதலாக "நாடோடி தென்றல்" படத்தில் நடித்தார். 4 நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பாரதிராஜா எதிர்பார்த்த நடிப்பை கரிகாலனால் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டு பின்னர் பாண்டியன் அந்த கேரக்டரில் நடிக்க வைக்கப்பட்டார். அதன் பிறகு "சோலையம்மா" என்ற படத்தில் வில்லனாக நடித்து சற்று பிரபலமானார். அதன் பிறகு அவர் நடித்த படம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
சிறிய இடைவெளிக்கு பிறகு ஆர்.கே.செல்வமணி கரிகாலனுக்கு வாய்ப்பளிக்க முன் வந்தார். அவர் இயக்கிய "கேப்டன் பிரபாகரன்" படத்தில் வில்லன் வீரபத்ரன் கேரக்ரில் நடிக்க தேர்வானார். காட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டு படப்பிடிப்புகள் நடந்தது. அப்போது ரியல் எஸ்டேட் பிசினசில் பிசியாக இருந்த கரிகாலன் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை, இதனால் கோபம் அடைந்த ஆர்.கே.செல்வமணி அவரை நீக்கி விட்டு அங்கு நடனமாட வந்த நடன கலைஞரான மன்சூர் அலிகானை நடிக்க வைத்தார். படம் வெளியீட்டுக்கு பிறகு ஹீரோ விஜயகாந்துக்கு நிகராக அவரது கேரக்டரும் பேசப்பட்டது.
அதன்பிறகு கரிகாலன் சொந்தமாக சில படங்களை தயாரித்து, இயக்கி நடித்தார். அவைகளும் அவருக்கு சரியாக அமையவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!