பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த மங்கம்மா சபதம்
பிப் 01, 2025
Advertisement
1943ம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்ட படம் "மங்கம்மா சபதம்". ரஞ்சன் வசுந்தரா தேவி, என்எஸ் கிருஷ்ணன், டி.ஏ மதுரம் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆச்சாரியா இயக்கினார். எஸ் ராஜேஸ்வரராவ் எம்பி பார்த்தசாரதி இசையமைத்தனர்.
கிராமத்து பெண்ணான மங்கம்மா அந்த நாட்டின் இளவரசனால் அவமானப்படுத்தப்படுகிறாள். அவனைத் திருமணம் செய்து, அவனுக்கு ஒரு குழந்தையை பெற்று, அந்த குழந்தையை கொண்டு அவனை பழி வாங்குவேன் என சபதம் செய்கிறாள். அந்த சபதத்தை அவள் எப்படி நிறைவேற்றினாள் என்பது தான் படத்தின் கதை.
எளிமையான இந்த கதை படத்தின் திரைக்கதையால் பெரும் வெற்றி பெற்றது. சுமார் 7 லட்சத்தில் உருவான இந்த படம் 40 லட்சம் வசூலித்து சாதனை படைத்தது. இன்றைய மதிப்பீட்டில் 600 கோடி. இந்தப் படம் இந்தியிலும், தெலுங்கிலும் "மங்களம்" என்ற பெயரில் ரீமேக் ஆனது. 1965 ஆம் ஆண்டு மீண்டும் தெலுங்கில் ரீமேக் ஆனது. சிங்களத்திலும் ரீமேக் ஆனது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…