
பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா?
டிச 31, 2025
Advertisement
"படையப்பா" படத்தில் ரஜினி பாம்பு புற்றுக்குள் கைவிட்ட கதையை படம் முழுக்க சொல்லி கலகலக்க வைத்தவர் அனு மோகன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்த அனுபவம் தரமான இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்.
ஆர் சுந்தர்ராஜன் இடம் உதவி இயக்குனராக இருந்த அனுமோகன், "இது ஒரு தொடர்கதை" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு "நினைவுச் சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன்" ஆகிய படங்களை இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு தரமான படங்கள் மற்றும் வெற்றி பெற்ற படங்கள். அப்படி இருந்தும் ஏன் அவர் தொடர்ந்து படங்களை இயக்கவில்லை என்பது தெரியவில்லை. தீவிரமாக நடிப்பிலேயே கவனம் செலுத்தினார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!