
பிளாஷ்பேக் : தமிழ் சினிமாவின் முதல் நடன நடிகை
இதற்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலாக நடன நடிகையாக இருந்தவர் குமாரி கமலா. ஆனால் இவர் பாரம்பரிய, பரதநாட்டிய நடன நடிகை. மயிலாடுதுறையில் பிறந்த கமலா, 3 வயதில் இருந்தே நடனம் கற்க ஆரம்பித்தார். கதக், பரதநாட்டியம், மேற்கத்திய நடனங்களை முறைப்படி குருமார்களிடம் கற்றார். மேடைகளில் ஆடிவந்த இவர், குமாரி கமலா என்ற பெயருடன் திரைப்படங்களில் ஆடத் தொடங்கினார்.
1938ம் ஆண்டு "சேவாதனம்" படத்தில் ஆடினார். 1944ல் "ஜகதலப்பிரதாபன்" படத்தில் ஆடிய பாம்பு நடனம். 1947ல் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற பாடலை பாடி இரட்டை வேடத்தில் ஆடியது, "பராசக்தி" படத்தில் "ஓ ரசிக்கும் சீமானே" போன்ற பாடல்கள் அவரது சாதனைகளாக அமைந்தது. சுமார் 50 படங்களில் நடனம் மட்டும் ஆடியுள்ளார்.
அதோடு ஸ்ரீவள்ளி, பாலயோகினி, ஜகதலப்பிரதாபன், கொஞ்சும் சலங்கை, காத்தவராயன், பக்த மீரா, நாம் இருவர், வீரக்கனல், வேதாள உலகம், குல தெய்வம், பாத்திபன் கனவு, சிவகங்கை சீமை , சிவகாமி, பராசக்தி, பாவை விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!