
பிளாஷ்பேக் : பகல் காட்சியை தொடங்கி வைத்த சிந்தாமணி
ஆண்களை கேள்வி கேட்டு சரியான பதில் சொல்லாதவர்களின் தலையை வெட்டிய சிந்தாமணி என்ற இளவரசியை பற்றிய நாட்டுப்புற கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவானது. இது ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதால் பெரிய ஆண் நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லை. நாட்டுப்புற கதையாக இருந்தாலும் பெண் விடுதலை பற்றி பேசிய இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன்.
"சம்பூர்ண ராமாயணம்" படத்திற்கு பிறகு இதுதான் நீளமான படம் என்கிறார்கள் (20,050 அடி). படம் வெளியாகி எல்லா இடங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இரவு 10 மி காட்சி நள்ளிரவை தாண்டியும் செல்வதால் பார்வையாளர்கள் வீடு திரும்ப சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து அரசுக்கு தயாரிப்பாளர் சுந்தரம் கடிதம் எழுதினார். 10 மணி காட்சிக்கு பதிலாக பகல் 1 மணிக்கு காட்சி நடத்த அனுமதி கோரி இருந்தார்.
இதனை ஏற்ற அரசு சோதனை முயற்சியாக சென்னை பிராட்வே தியேட்டரில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பகல் ஒரு மணி காட்சி (மேட்னி ஷோ) நடத்த ஒப்புக் கொண்டது. பின்னர் 3 ஷோக்கள் நடத்த ஒப்புக் கொண்டது. பகல் காட்சிக்கு ஏற்ப தியேட்டரும் மாற்றி அமைக்கப்பட்டது.
வி.என்.ஜானகி அம்மையார் முதல்வரான போது இந்த படத்தின் நீளத்தை குறைத்து வண்ணகலரில் வெளியிடும் திட்டம் துவங்கியது. ஆனால் குறுகிய காலத்தில் அவர் பதவி இழந்து விடவே அந்த திட்டம் கைவிடப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!