மாளவிகா மோகனன் படத்தையும் லோகேஷின் எல்சியு-வில் சேர்த்த நெட்டிசன்கள்
பிப் 11, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடித்து வரும் படம் லியோ. இதற்கு முன்னதாக கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்தில் "லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்" என்று சொல்லப்படுகிற எல்சியு என்கிற முறையில் கமலின் முந்தைய விக்ரம் பட கதாபாத்திரத்தையும் இதற்கு முன்னதாக தான் இயக்கிய கைதி படத்தின் ஒரு சில கதாபாத்திரங்களையும் தொடர்புபடுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் தனது அடுத்த படத்தை அறிவித்த நாளில் இருந்து இப்போது வரை நெட்டிசன்கள் பலரும் இந்த படமும் லோகேஷ் கனகராஜின் எல்சியு பார்முலாவில் தான் உருவாகிறது என கூறி வந்தனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசரில் இருந்து கூட சில காட்சிகளை குறிப்பிட்டு பேசி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள திரையுலகில் இருந்து இளம் நடிகரான மேத்யூ தாமஸ் என்பவர் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்கிற படத்தில் மாளவிகா மோகனதுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து தற்போது நெட்டிஷன்கள் பலரும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.. அவருடன் கிறிஸ்டி படத்தில் இணைந்து நடித்த மேத்யூ தாமஸ் தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடிப்பதால் கிறிஸ்டி படத்தையும் இந்த எல்சியுவுடன் தொடர்புபடுத்தி தங்களது யூகங்களை பரப்பி வருகிறார்கள். படம் வெளியாவதற்குள் இன்னும் என்னென்ன யுகங்கள் இதுபோல கிளம்புமோ தெரியவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!