
மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம்
ஏப் 30, 2024
Advertisement
உறியடி, உறியடி 2 படங்கள் மூலம் பிரபலமானார் நடிகரும், இயக்குனருமான விஜயகுமார். கடைசியாக பைட் கிளப் படத்தில் நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் "எலக்சன்" என்கிற படத்தில் நடித்துள்ளார். "அயோத்தி" புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, "வத்திக்குச்சி" திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி இப்படம் தயாராகி உள்ளது. இதை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற மே 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!