
என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள்
சமீபத்தில் இவர் நடித்த அன்னபூரணி படம் வெளியானது. நயன்தாரா அளித்த பேட்டியில், ‛‛தயவு செய்து என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். அப்படி சொன்னால் பலரும் திட்டுகிறார்கள். என்னுடைய அனுமதி இல்லாமல் எதுவுமே போகக்கூடாது என்று சொல்கிறேன். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்று என்னிடம் சொல்லாமலேயே போட்டு விடுகிறார்கள்.
இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா? இல்லை பெண்ணாக இருப்பதினால் அப்படி ஒரு பட்டம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை அந்த பட்டத்தை குறிப்பிடும் போதும் ஒரு பத்து பேர் பெருமையாக சொன்னால், 50 பேர் என்னை திட்டுகிறார்கள். என்னுடைய பயணமும் அந்த பட்டத்தை நோக்கி கிடையாது. அந்த பட்டம் எல்லோருமே எனக்கு கொடுத்துள்ள அன்பு. நான் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டாம் என்று சொன்னாலும் யாருமே கேட்பதில்லை. இந்த அன்பினால்தான் அது கிடைத்தது"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!