
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் தமிழ் முருகன்
‛தமிழ் மக்களுக்கும், நிலத்திற்கும் பாதுகாவலன், வீரன், மன்னன் மற்றும் தலைவன்" எனத் தலைப்பிட்டு, இதன் வீடியோவை நடிகர் தனுஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கடவுள் முருகன் போல், கையில் வேல் ஏந்தி, நாயகன் யானையின் மீது அமர்ந்து வரும்படி முன்னோட்ட வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. படத்தில், முருகன் வேடத்தில் தனுஷ் நடிப்பதாக தெரிகிறது.
இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், தமிழ் கடவுள் முருகனைப் பற்றிய புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரிக்கப்படுவதாகக் கூறி தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் "தமிழ் முருகன்" படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!