கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம்
மே 17, 2022
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் 1200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. கேஜிஎப்- 2 படத்தை பார்த்துவிட்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டி உள்ளார்.
அதில் ‛‛கேஜிஎப் 2 படத்தை பார்த்து விட்டேன். கதை சொன்ன விதம் படத்தொகுப்பு ஆகியவை கட்டிங் எட்ஜ் ஸ்டைலில் இருப்பது அருமை. அதிலும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடக்கும் காட்சிகளை காட்டும் இன்டர்கட் சாட்டுகளை பயன்படுத்தி இருப்பது துணிச்சலான முடிவு. இப்படத்தின் ஆக்ஷனும் வசனங்களும் மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. யஷ் மாஸாக நடித்துள்ளார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்ததற்காக நன்றி பிரசாந்த் நீல். இரண்டு மாஸ்டர்கள் அன்பரிவ பங்களிப்பு அபாரமாக உள்ளது"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!