இயக்குனர் ஆச்சார்யா ரவி மறைவு
டிச 28, 2021
இயக்குனர் பாலாவிடம் பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவரும், "ஆச்சார்யா" என்ற படத்தை இயக்கியவருமான ஆச்சார்யா ரவி, உடல் நலக் குறைவால் காலமானார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது சொந்த உரான மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(டிச., 28) காலை காலமானார்.
"என்னதான் பேசுவதோ" என்ற படத்தை இயக்கி முடித்திருந்தார். அந்தப் படம் முடிந்து எட்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது. அப்படத்தை எப்படியும் வெளியில் கொண்டு வர வேண்டும் என தீவிர முயற்சியில் இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக இயக்குனர் பாலா, சூர்யா இணையும் படத்திற்கான கதை விவாதத்தில் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!