
35 ஆண்டுகளுக்குபின் பூர்ணிமாவுடன் இணைந்து கே.பாக்யராஜ் நடித்த படம் எது தெரியுமா
இந்த படத்தில் தனது பகுதிகள் அனைத்தையும் பாக்யராஜ் சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இப்படத்தை நன்றாகப் புரொமோட் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இன்னும் சில க்ளோஸ்-அப் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். எனவே, அந்தக் காட்சிகளை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க உள்ளோம்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமாவும் இணைந்து நடித்த படமும் இதுதான். அதுவும் கணவன் - மனைவியாகவே நடித்துள்ளனர். பாக்யராஜிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, "கன்னடத்து பைங்கிளி" படத்திற்காக அவர் நடித்த கடைசி காட்சியை வெளியிட்டுள்ளோம். காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்த இப்படத்தில் நாயகனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பாக்யராஜ் இடம் பெறுவார். புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!