
புதிய லுக்கில் ‛அட்டக்கத்தி தினேஷ்
ஜூலை 29, 2023
Advertisement
"அட்டகத்தி" படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது ஜே பேபி, தண்டாகாரன்யம், படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் கருப்பு பல்ஸர், லப்பர் பந்து போன்ற படங்களின் நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொண்டு ஸ்டைலாக வலம் வருகிறார் தினேஷ். இந்த புதிய லுக்கை அவரே வெளியிட்டுள்ளார். மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக இந்த புதிய லுக்கில் அவர் உள்ளார் என்கிறார்கள். படம் பற்றிய மற்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!