இந்தியன்-2க்கும் சேர்த்து ஷங்கருக்கு ஷெட்யூல் போட்டு தந்த தில் ராஜு
ஏப் 09, 2023
Advertisement
இயக்குனர் ஷங்கர் தற்போது ஒரே சமயத்தில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களையும் மாறிமாறி இயக்கி வருகிறார். கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே ஆரம்பித்த இந்தியன் 2 படம் சில காரணங்களால் தடைப்பட்டு நின்றபோது, தெலுங்கில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினார் ஷங்கர். அதை தொடர்ந்து வந்த நாட்களில் இந்தியன்-2 பட பிரச்னைகள் சுமூகமாக தீர்ந்ததால் அந்த படத்தின் படப்பிடிப்பையும் துவங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதன்பிறகு தற்போது இரண்டு படங்களையும் மாறிமாறி இயக்கி வருகிறார் ஷங்கர். ஆனால் ஷங்கருக்கு எந்தவித டென்ஷனும் இல்லாமல் இந்த இரண்டு படத்தின் பணிகளை கவனிக்கும் விதமாக படப்பிடிப்பு ஷெட்யூல் போட்டு தந்ததாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ராம்சரண் படத்தை துவங்கிய சில நாட்களிலேயே இந்தியன் 2 படத்தையும் ஷங்கர் துவங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் நானும் நடிகர் ராம்சரணும் அவரது டென்ஷனை குறைக்கும் விதமாக, எங்கள் படத்தை 10 நாட்கள் இயக்குவது என்றும் இந்தியன் 2 படத்திற்கு பத்து நாட்கள் ஒதுக்குவது என்றும் இடையில் 5 நாட்கள் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பிற்கான முன் தயாரிப்பில் அவர் ஈடுபடுவது என்றும் ஒரு திட்டம் வகுத்து ஷங்கரிடம் கொடுத்தோம். அவருக்கும் அது சரியாக இருந்ததால் தான் தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பும் எந்தவித தடங்களும் இன்றி நடைபெற்று வருகின்றது.
எங்களது படத்தின் படப்பிடிப்பு 70% தற்போது நிறைவு பெற்றுவிட்டது. இந்தியன்-2 படப்பிடிப்பு ஜூன் மாதம் முழுவதுமாக முடிவடைந்து விடும். அதன்பிறகு ஜூலையில் இருந்து எங்களது படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் முழு கவனம் செலுத்த உள்ளார்” என்று கூறியுள்ளார் தில் ராஜு.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!