
தர்ஷாவின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
ஏப் 15, 2022
Advertisement
பள்ளி படிப்பு முடித்ததுமே மாடலிங் துறையில் நுழைந்தவர் தர்ஷா குப்தா. ஜீ தமிழ் "முள்ளும் மலரும்", விஜய் டிவி "செந்தூரப்பூவே" உள்ளிட்ட சில முக்கிய சீரியல்களில் நடித்து வந்த அவர், க்ளாமர் குயினாக சில நாட்கள் இன்ஸ்டாவை கலக்கி வந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் கிடைக்கவே சின்னத்திரையில் நடிப்பதை விட்டுவிட்டார். எனினும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சிக்கு லீவ் கொடுத்துவிட்டு அண்மைகாலங்களில் டிரெடிஷனல் உடையில் ஜொலித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பாவாடை தாவணியில் க்யூட்டான சில புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!