
ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க போகும் தனுஷ்
நவ 02, 2024
Advertisement
ராயன் படத்தை அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். அவர் இயக்கி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப் போகிறார். போர்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா மற்றும் லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்கப் போகிறார். இதில் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தை தற்போது தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரிக்கும் ஆகாஷே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!