
சீறும் கேள்விகளை கர்ணன் ஏந்தி வருவான் - தனுஷ்
மார் 31, 2021
Advertisement
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கர்ணன்". இப்படத்தின் பிரஸ்மீட் நடந்தது. தனுஷ் ஹாலிவுட்டில் படத்தில் நடிப்பதால் இதில் பங்கேற்கவில்லை. இதனால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இந்நேரம் உங்களுடன் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். கர்ணன் மிகவும் ஸ்பெஷலான படம். என்னை கர்ணனாக மாற்றிய மாரி செல்வராஜ், என் மேல் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து ஒரு நடிகனாக இன்னும் அதிகம் உழைக்கணும் என ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கும் நன்றி. தொடர்ந்து எனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன். கர்ணன் சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்"" என தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!