
விஜய் பாடலுக்கு டான்சிங் ரோசின் நடனம்
ஆக 18, 2021
Advertisement
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சபீர் கலரக்கல். இதற்கு முன்பு பேட்ட, டெடி, அடங்கமறு உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் சபீர் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக சபீர் தனது உடலை வெறித்தனமாகக் குறைத்து அசல் பாக்சிங் வீரர் போல நடித்து அனைவரையும் அதிர வைத்தார். டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர், விஜய் நடித்த "மாஸ்டர்" படத்தில் இடம் பெற்ற பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சபீர் அடுத்து விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!