
டாடா படக்குழுவை வாழ்த்திய கமல்
பிப் 11, 2023
Advertisement
சின்னத்திரை நடிகரான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தொடர்ந்து ‛லிப்ட்" படத்தில் நாயகனாக நடித்தார். இப்போது ‛டாடா" என்ற படத்தில் நடித்துள்ளார். அபர்ணா தாஸ் நாயகியாக நடித்துள்ளார். கணேஷ் கே பாபு இயக்கி உள்ளார். நேற்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் கவின். இதுபற்றி, "இன்று கோவிலுக்கு சென்றேன்" என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கவின் தவிர்த்து டாடா படக்குழுவும் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுதொடர்பான போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!