
பிரஜன் படத்தின் பர்ஸ்ட் லுக் வைரல்
ஜூலை 29, 2022
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க சென்ற நடிகர்களில் பிரஜனும் ஒருவர். தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைக்க போராடி வருகிறார். தற்போது அவர் "டி3"என்ற படத்தில் நடிகை வித்யா பிரதீப்புடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சட்டை இல்லாமல் நிற்கும் பிரஜன் சிக்ஸ் பேக் உடம்புடன் கையில் விலங்குடன் காட்சியளிக்கிறார். மேலும், "இதுவரை சொல்லப்படாத உண்மை கதை" என்ற வாசகமும் போஸ்டரில் ஹைலைட் செய்து காட்டப்பட்டுள்ளது. சினிமாவில் பெரிய ப்ரேக் கொடுக்க வேண்டும் என காத்திருந்த பிரஜனுக்கு "டி3" படம் நல்ல ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!