
பத்து தல படப்பிடிப்பில் மீண்டும் சிம்பு
படம் மீண்டும் நடக்குமோ நடக்காதோ என்ற நிலையில் இயக்குனரை மாற்றினார்கள். "சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை" படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி படப்பிடிப்பை மீண்டும் கடந்த மாதம் ஆரம்பித்தார்கள். ஒரு கட்டமாக படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்ட நிலையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் சென்றார்கள். அவர் நலமுடன் தற்போது திரும்பிவிட்டார்.
இந்நிலையில் படப்பிடிப்பை மீண்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் ஆரம்பமாக உள்ளது. இந்த முறையும் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். மீண்டும் வேறு எந்தத் தடங்கலும் வராமல் நடந்து முடிந்தால் சிறப்பு.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!