
குறைவான வரவேற்பில் வாத்தி டீசர்
இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. யு டியூபில் வெளியான இரண்டு மொழி டீசர்களில் தமிழ் டீசரை விட தெலுங்கு டீசருக்குக் கூடுதலான வரவேற்பு கிடைத்துள்ளது. இருந்தாலும் தனுஷ் படத்திற்கான வழக்கமான வரவேற்பு இது இல்லை. தமிழ் டீசர் 14 லட்சம் பார்வைகளையும், தெலுங்கு டீசர் 18 லட்சம் பார்வைகைளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு இரு மொழிப் படம் என்று சொன்னாலும் காட்சிகள் தெலுங்குப் படங்களைப் போலத்தான் உள்ளது. போலீஸ் நிலைய சுவற்றில் உள்ள போர்டில் தெலுங்கு எழுத்துக்கள், வண்டி எண்களில் ஆந்திரா பதிவு எண்கள், ஆந்திரா பேருந்துகள் என தெலுங்கு வாடை வீசுகிறது.
சமீபத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்த "வாரியர்" படத்திலும் இப்படித்தான் ஏமாற்றி இருந்தார்கள். அது போலவே "வாத்தி" படத்திலும் செய்துள்ளார்கள் போலிருக்கிறது. பேசாமல் ஒரு மொழியில் எடுத்துவிட்டு அடுத்த மொழியில் டப்பிங் படம் என அறிவிக்கலாமே ?. எதற்கு ரசிகர்களை இப்படி ஏமாற்ற வேண்டும் ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!