
விமல் மீது போலீசில் புகார்
ஜன 19, 2021
நடிகரின் விமலின் சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. விமலின் பூர்வீக வீடு இங்கு உள்ளது. அவரது வீட்டுக்கு எதிரில் இருக்கும் காலி மைதானத்தில் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை ஊர் மக்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர். சமீபத்தில் விளக்குதூணை சுற்றி சிறிய மேடை ஒன்றை ஊர்காரர்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், விளக்கு தூண் மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளி உள்ளது. இது விமல் குடும்பத்தினரின் வேலை என்று அதே ஊரைச் சேர்ந்த கோவில் பூசாரி செல்வம் புத்தாநத்தம் போலீசில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!