
“சர்வானந்த் எனக்கு இன்னொரு ராம்சரண்” : சிரஞ்சீவி வாழ்த்து
அந்த நிகழ்வில் சிரஞ்சீவி பேசும்போது, “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என கூறி ராம்சரண் என்னை கேட்டுக்கொண்டார். ராம்சரணும் சர்வானந்தும் சிறுவயது முதல் நண்பர்கள்.. சர்வானந்த் என் வீட்டில் வளர்ந்த பையன்.. அதனால் எனக்கு இன்னொரு ராம்சரண் போன்றவர். அவருக்கு நடிப்பில் விருப்பம் இருக்கிறதா என தெரியாமலேயே தான், என்னுடன் சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிக்க வைத்தேன்.. ஆனால் அதன்பின் நடந்ததெல்லாம் வேற லெவல். அவருக்குள் இருந்த நெருப்பு அவரை மிகப்பெரிய அளவிற்கு கொண்டுவந்து விட்டது. இந்தப்படத்தின் சில காட்சிகளை நான் பார்த்துவிட்டேன். அப்போதே இந்தப்படத்தின் வெற்றி உறுதி என தெரிந்துவிட்டது” என கூறி, சர்வானந்த் உள்ளிட்ட படக்குழுவினரை நெகிழ வைத்துவிட்டார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி தற்போது கம்மம் பகுதியில் "ஆச்சார்யா" படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதால், அவருக்காகவே இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை, கம்மம் பகுதியிலேயே நடத்த சர்வானந்தும் ஸ்ரீகரம் படத்தின் தயாரிப்பாளரும் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!